அந்தரங்க பகுதியை போட்டோ எடுத்து இளம் பெண்களுக்கு அனுப்பி வைத்த பாதிரியார்- அடுக்கடுக்காக குவியும் புகார்கள்

 
பெ

பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது அடுக்கடுக்கான பாலியல் புகார் குவிந்து வருகின்றன.  இளம் பெண் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்திருக்கும் சைபர் கிரைம் போலீசார் தலைமறைவாக இருக்கும் பாதிரியாரை தேடி வருகின்றனர்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு அடுத்த பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ.  29 வயதான இந்த வாலிபர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்துள்ளார்.  கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தக்கலை அடுத்த பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

அன்

 இந்த நிலையில் பாதிரியார் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள். வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.  சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களும் ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் ஷாட் காட்சிகளும் வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன .

இத்தனை பரபரப்பு நடந்தும்  பெண்கள் யாரும் பாதிரியாரின் மீது புகார் அளிக்காததால் வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது.  இந்த நிலையில்தான் பேச்சுப் பாறையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாதிரியார் மீது புகார் அளித்தார்.  அந்த புகாரில், பெனடிக் ஆன்றோ பேச்சுப்பாறை சர்ச்சில் பாதிரியாராக இருந்தபோது நான் அங்கு பிரார்த்தனைக்காக சென்றேன்.   அப்போது பாதிரியார் என்னை தவறான  கண்ணோட்டத்துடன் பார்த்தார்.  என் உடலை மோசமாக தொட்டு கூச்சப்படுத்தினார்.  

 அதன் பின்னர் வாட்ஸப் மூலம் என் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பினார்.  அவரது அந்தரங்க பகுதியினை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினார் என்று கூறியிருக்கிறார்.  பேச்சுப் பாறையில் இருந்து பிலாங்காலை சர்ச்சுக்கு மாற்றலாகி சென்ற பின்னரும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்படி வற்புறுத்தினார் என்று புகாரில் கூறியிருக்கிறார்.

பென

 இந்த புகாரின் அடிப்படையில் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸ் சார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  பெண் வன்கொடுமை ,பாலியல் உணர்வை தூண்டுவது, சமூக வலைத்தளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் பாதிரியார் தலைமறைவாக இருக்கிறார் . தலைமறைவாக இருக்கும் பாதிரியாரை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.