"பப்ளிக்கா பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வேன்" -மிரட்டல் விடுத்த சாமியார் -அடுத்து என்னாச்சி பாருங்க!

 
preist preist

முஸ்லிம் பெண்களை பொது இடத்தில வைத்து பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டல் விடுத்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்

samiyar 

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் இந்து மத சாமியார் ஒருவர் ஒரு ஆசிரமம் வைத்து நடத்தி வந்தார் .அவரிடம் பலபேர் ஆசிர்வாதம் வாங்குவதற்காக அவரின் ஆசிரமத்திற்கு வருவது வழக்கம் இந்நிலையில் அவர் ஒரு நாள் ஜீப்பில் இருந்தவாறு பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தினார். 
அப்போது சீதாபூரில் உள்ள மசூதிக்கு அருகே அவரின் ஜீப் சென்ற போது, "இந்தப் பகுதியில் எந்த இந்து பெண்களுக்காவது முஸ்லிம்கள் தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை கடத்திச் சென்று பொதுவெளியில் வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்" என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
சாமியாரின் இந்த பேச்சுக்கள் இஸலாம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரிடமிருந்து கோரிக்கை எழுந்ததையடுத்து அவர் 11 நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டார் .