"கேரள பெண்களை காமித்து ஓரம் கட்டி..."சுற்றுலா வந்த வாலிபர்களை குறி வைத்த கூட்டம்

 
sex dance

கொடைக்கானலில் சுற்றுலா வரும் நபர்களை குறி வைத்து ,மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

police burst sex racket

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் டிப்போ பகுதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு சுற்றுலா வரும் வாலிபர்களை வளைத்து பிடித்து  ஒரு கூட்டம் முதலில் மசாஜ் என்ற பெயரில் கூட்டி வருவார்கள் .பின்னர் அங்கு கேரள பெண்களை காமித்து அவர்களை மயக்கி பாலியல் உறவுக்கு கூப்பிட்டு ,பணம் கறந்து விடுவார்கள் .
இந்த பாலியல் தொழில் நடப்பது பற்றி  போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு கொடைக்கானல் போலீசார் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது இந்த மசாஜ் சென்டரை நடத்திய நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், ஜனகராஜ் , மதுரையை சேர்ந்த சரண் ஆகிய மூவரும் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.
இந்த ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரில் செல்வ ராஜுவால்  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ராஜி , திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சர்மிலி ஆகிய இரு பெண்களையும்  போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பினர்.மேற்கொண்டு அங்கிருக்கும் அனைத்து மசாஜ் செண்டரையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்