100 பெண்களுக்கு ஆபாச வீடியோ தொல்லை! வாலிபர் சிக்கினார்

 
v


100 பெண்களுக்கு ஆபாச வீடியோ தொல்லை கொடுத்து வந்த வாலிபர் போலீசில் சிக்கி இருக்கிறார்.

 மும்பையில் அந்தேரி பகுதியில் பேஷன் டிசைனராக இருந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல் வந்திருக்கிறது.   இதில் அதிர்ந்து போன அந்த பெண் போலீசில் புகார் அளித்திருக்கிறார் .  இந்த பெண் அளித்த புகாரில் போலீசார் அந்த  செல்போன் நம்பரை பதிவு செய்து கொண்டு விசாரணை நடத்தியதில் , பேஷன் டிசைன் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்கிற 45 வயது வாலிபர் என்பது தெரிய வந்திருக்கிறது.

வி

 அந்த ஒரு பெண் மட்டுமல்லாமல் அங்கு வேலை பார்த்து வரும் மற்ற பெண்களுக்கும் ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததால் அது குறித்து புகார் எழுந்ததால் உரிமையாளர் ராஜகுமாரை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறார்.   அது மட்டும் அல்லாமல் நூறு பெண்களுக்கு அழைப்பு எடுத்து இது போன்ற ஆபாச தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 இதை அடுத்து அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் இந்த வாலிபரின் செல்ஃபோர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்திருக்கிறது.   இதனால் அந்த வாலிபரை உடனடியாக பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.  

 ஒரு வருடத்திற்கு பின்னர் கடந்த வாரம் அந்த செல்போன் புனேயில் சிக்னல் காட்டி இருக்கிறது .  இதை அடுத்து போலீசார் புனேவுக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு சிக்னல் காட்டிய இடத்திற்கு சென்று  ராஜ்குமாரை  கைது செய்து மும்பை அழைத்து வந்துள்ளனர் .

மும்பையில் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். 

 ஒரு வருடமாக தலைமுறைவாக இருந்த இந்த குற்றவாளி பிடிபட்டுள்ளதால்  பாதிக்கப்பட்ட பெண்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கிறார்கள்.