"அந்த ஏட்டு என்னை எட்டு மணி நேரம் வைத்து.." -கணவனை விட்டு ஓடிப்போன பெண்ணுக்கு நேர்ந்த நிலை

 
love

கள்ளக்காதலனுடன் ஓடிப்போன பெண்ணை மீட்டு, அந்த பெண்ணுடன் லாட்ஜில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்த போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்தனர் 

பெண்ணுடன் லாட்ஜில் தங்கி இருந்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

தமிழகத்தின் தென்காசியை சேர்ந்த 38 வயது தொழிலாளி ஒருவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய 35 வயது மனைவி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், 28 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்து ,அவரை கண்டித்தார் .
இதனால் அந்த பெண் கணவரை விட்டுவிட்டு அந்த காதலனோடு ஓடி விட்டார் .பின்னர் அந்த கணவன் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் சென்று முத்துப்பாண்டி என்ற ஏட்டுவிடம் புகார் தந்தார் .அதன் பிறகு அந்த ஏட்டு மட்டும் அந்த பெண் இருக்குமிடத்தை கண்டுபிடித்து அவரை கூட்டி வர சென்றார் .பின்னர் வரும் வழியில் அந்த ஏட்டு அந்த பெண்ணை ஓர் லாட்ஜில் தன்னுடன் தங்குமாறு கட்டாயப்படுத்தி எட்டு மணி நேரம் தங்க வைத்தார் .இதனால் அந்த பெண் மறுநாள் அவரிடமிருந்து தப்பி வந்து போலீசில் புகார் தந்தார் .அதை விசாரித்த போலீஸ் உயதிகாரிகள் அந்த ஏட்டு முத்துபாண்டியை பணி நீக்கம் செய்தனர்