ரியல் எஸ்டேட் வியாபாரியை கொலை செய்த காவலர் தம்பதி- பரபரப்பு பிண்ணனி
தெலங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான் காவலர் தம்பதி ரியல் எஸ்டேட் வியாபாரியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் சிந்திப்பேட்டை மாவட்டம் சின்னக்கோடூரைச் சேர்ந்த கௌதி பிரவீன் குமார் 2007-ல் காவல்துறையில் கவலராக பணியில் சேர்ந்தார். தற்போது மாவட்ட குற்றப்பிரிவு துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என தனது மனைவி ரஜிதாவுடன் சேர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ. 60 லட்சத்தை இழந்ததார். இதனால் சுமார் ரூ. 30 லட்சம் கடன் ஏற்பட்டது. அந்தக் கடனை அடைப்பதற்காக, இருவரும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தனர். இதற்காக பிரவீன் தனது தம்பிக்குச் சொந்தமான ஒரு மனையை, நகரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரியான பெல்டே விஸ்வநாதத் (57) என்பவரிடம் தனது தம்பியின் நிலத்தை அடமானம் வைத்து, ரூ. 12 லட்சம் கடன் பெற்றார். ஆனால் மீண்டும் பணம் தராததால் விஸ்வநாதம் தன்னிடம் அடமானம் வைக்கப்பட்ட நிலத்தை விற்கப்போவதாகக் கூறினார். இதனால் காவலர் பிரவீன் வேறு அடமானத்திற்கு தருவதாக கூறி அவரைச் சம்மதிக்க வைத்துள்ளார். இதற்காக கடந்த சனிக்கிழமை பிரவீனும், ரஜிதாவும் விஸ்வநாதத்தை தங்களது காரில் மெட்டுபாண்டலாவின் புறநகர்ப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றனர். காரில் செல்லும்போதே விஸ்வநாத் கைகளையும் கால்களையும் கட்டி, கழுத்தில் ஒரு கம்பியைச் சுற்றி இறுக்கி கொலை செய்தனர்.பின்னர் விஸ்வநாத் அணிந்திருந்த 14 சவரன் தங்க நகைகளை எடுத்து, இமாம்பாடு அருகே உள்ள ஒரு கால்வாயில் அவரது உடலை வீசினர். அங்கிருந்து கணவன் மனைவி சேர்ந்து காரில் ஐதராபாத் சென்று, ஒரு தங்கக் கடையில் நகைகளை விற்றுப் பணம் பெற்றனர். இதற்கிடையே விஸ்வநாதத்தின் மனைவி வனிதா, தனது கணவர் வீட்டிற்கு வராததையடுத்து சின்னக்கோடூர் காவல் நிலையத்தில் அதே நாளில் புகார் அளித்தார். போலீசஸ்ரீ வழக்குப்பதிவு செய்து விஸ்வநாத் உடலை ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டெடுத்தனர். பின்னர் சித்திப்பேட்டை உதவி ஆணையர் ரவீந்தர் ரெட்டியின் மேற்பார்வையில் குற்றப்பிரிவு அதிரடிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் மொபைல் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் காவலர் பிரவீன் தம்பதியினர் காரில் விஸ்வநாத்தை அழைத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்யப்பட்டு விசாரணையில் உண்மையை ஒப்பு கொண்டதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நான்கு நாட்களுக்குள் இந்த வழக்கை முடித்ததற்காக காவல் ஆணையர் ரஷ்மி பெருமாள் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் பிரவீன் மற்றும் அவரது மனைவி இணைந்து கடந்த மாதம் 25 ஆம் தேதி, தங்கள் வீட்டருகே வசித்து வந்த வயதான மூதாட்டிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மயக்கத்தில் இருந்த மூதாட்டியை காரில் அழைத்து சென்று அவரிடமிருந்து ஒரு தங்க நெக்லஸைத் திருடி ஐதராபாத்தில் விற்று கிடைத்த ரூ 4.80 லட்சம் பணத்தையும் சூதாட்டத்தில் இழந்தனர். அடுத்த நாள் எதுவும் அறியாதது போல் பிரவீன் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டி மூலம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.

