பிளஸ்டூ மாணவி பாலியல் பலாத்காரம் -காதலன் சிறையிலடைப்பு

 
l

 திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி ஆசை வார்த்தைகள் சொல்லி பிளஸ்டூ  மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது ஸ்ரீபுரம்தான் குமிளந்துறை.   இந்த ஊரைச் சேர்ந்தவர் அஜித்.  22 வயதான இவர் கூலித் தொழிலாளி. ஸ்ரீபுரம் தான் குமிளந்துறை ஊருக்கு பக்கத்து ஊரில் உள்ள பிளஸ் டூ படித்து வரும் 17 வயது சிறுமியுடன் அஜித் நட்பாக பழகி வந்திருக்கிறார்.    ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்தவர்கள் பின்னர் அந்த சிறுமியை காதலிப்பதாக சொல்லி பழகி வந்திருக்கிறார்கள்.

s

பின்னர்  அஜித் அந்த சிறுமியை காதலித்து வந்திருக்கிறார். சிறுமியும்  அவரை காதலித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அச்சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறியிருக்கிறார்.  அதை நம்பி காதலனுடன் சென்றிருக்கிறார் சிறுமி .  ஆனால் அங்கு சென்றதும் சிறுமிக்கு ஒரே அதிர்ச்சி.  அந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

 இது குறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை தேடி வந்தனர்.   இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் நேற்று இரவில் அஜித்தை கைது செய்துள்ளனர்.  அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் .   பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.