சென்னையில் பிளஸ் 2 மாணவர் அடித்துக் கொலை
சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளி வளாகத்தில் ஒட்டிய பிளஸ் 2 படிக்கும் மாணவர் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் அருகே உள்ள விம்கோ நகரில்,ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு அருகே, விம்கோ நகரைச் சேர்ந்த 19 வயதான 12-ஆம் வகுப்பு மாணவர் தனுஷ் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களால் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளியின் பின்புறத்தில் காயங்களுடன் கிடந்த மாணவன் தனுஷின் உடலை கைப்பற்றி, சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி அருகே பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பள்ளியில் படித்த மாணவர்கள் சிலருக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

