"எத்தனை பேர்னே தெரியாதளவுக்கு மாணவியை தூக்கிட்டு போய் ..."-35 பேரை பிடித்து போலீஸ் விசாரணை.

 
rape


பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 35 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர் 

protest against rape
உ.பி.யின் பிலிபிட்டில் உள்ள பர்கேரா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை காலையில் ஒரு 15 வயதான ஸ்கூல் மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சீருடையில்  சென்றார் .அப்போது அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ஒரு கூட்டம் அங்குள்ள ஒரு தோட்டதிற்கு கடத்தி சென்று அவரை  கூட்டுப் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்தார் 

அப்பெண்  வழக்கமாக மாலை 5 மணிக்குத் வீடு திரும்புவார் . ஆனால் அன்று  இரவு 11 மணியாகியும் அவர் வீட்டுக்கு வராததால் அந்த குடும்பத்தினர் போலீசில் புகார் தந்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடினர் .அப்போது அவரது அரை நிர்வாண உடல் அவரது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

அந்த பெண் சடலத்தின் அருகே அவரது சைக்கிள் மற்றும் பள்ளி பை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. சம்பவ இடத்தில் இருந்து சில பீர் பாட்டில்களும் மீட்கப்பட்டன. மேலும் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

போலீசார் அந்த  உடலை கைப்பற்றி , பிரேதப் பரிசோதனைசெய்ததும் அவரின் குடுமபத்தினரிடம் அவர் உடலை கொடுத்தனர்  அதைத் தொடர்ந்து குடும்பத்தினர் அவரை  தகனம் செய்தனர்.இந்த வழக்கில் போலீசார்  35 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .இந்த வழக்கை 12 போலீஸ் குழுக்கள் அமைத்து விசாரித்து வருவதாக போலீசார் கூறினர் .