சிறைக்குள் ஆண் கைதிகளுடன் நெருக்கமாக இருந்து வந்த பெண் காவலர்கள் புகைப்படங்கள்

 
kஇ

சிறைக்குள் ஆண் கைதிகளிடம் நெருக்கமாக இருந்து வந்த பெண் காவலர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.  பிரிட்டன் நாட்டில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

 இங்கிலாந்து நாட்டில் ரெக்ஸ் காம் எனும் இடத்தில் எச்எம்பி மெர்வின் எனும் சிறைச்சாலை அமைந்திருக்கிறது.  பிரபலமான சிறைச்சாலையான இது ஆண் கைதிகளுக்கு மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சிறை ஆகும் . சிறிய குற்றம் முதல் பெரிய குற்றம் வரைக்கும் புரிந்து அவர்கள் அனைவரும் இந்த சிறையில் கைதிகளாக உள்ளனர்.   2,100 ஆண் கைதிகள் உள்ளனர்.  இந்த சிறைக்கு பாதுகாப்பு பணிக்காக 500 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்த 500 பேரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பெண் காவலர்கள்.

ப்

 இந்த பெண் காவலர்களின் 18 பேர் சிறை கைதிகளிடம் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.  லஞ்சமும் வாங்கி இருக்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.   சிறை கைதிகளுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன . இதனால் மேலதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 18 பெண் காவலர்கள் குற்றம் புரிந்தவர்களாக கருதி அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .   சிறைக்கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு செல்போன்கள் போதை பொருட்கள் உள்ளிட்டவை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.   சில காவலர்கள் கைதிகளுடன் நெருக்கமாக இருந்தும் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இங்கு 18  பேரில் மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  15 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . 

 ஆண்கள் சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளிடம் பெண் காவலர்கள் பாலியல் உறவு வைத்திருந்த விவகாரம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.