“அதிகாலையில் வந்த ஆபாச வீடியோ” – கோவா துணை முதல்வர் வாட்ஸ் அப் க்ரூப்பில் அனுப்பிய மர்மநபர்.

 

“அதிகாலையில் வந்த ஆபாச வீடியோ” – கோவா துணை முதல்வர் வாட்ஸ் அப் க்ரூப்பில் அனுப்பிய மர்மநபர்.

பல வாட்ஸ் அப் க்ரூப்புக்ளில் இப்போது பல ஆபாச வீடியோக்கள் உலா வருகின்றன .ஆனால் சமீபத்தில் கோவா துணை முதல்வர் உறுப்பினராக இருக்கும் ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பிற்கே யாரோ ஒருவர் ஆபாச வீடியோ அனுப்பியுள்ளது இப்போது அங்கு பரபரப்பினையுண்டாக்கியுள்ளது.


கோவா துணை முதல்வர் சந்திரகாந்த் கவ்லேகர்,பல வாட்ஸ் அப் க்ரூப்பில் உறுப்பினராக இருக்கிறார் .அதில் ‘கோவாவின் கிராமங்கள்’ என்ற க்ரூப்பும் ஒன்று .அந்த வாட்ஸ் அப் க்ரூப்புக்கு திங்களன்று அதிகாலை 1.20 மணிக்கு யாரோ ஒருவர் சில ஆபாச வீடியோவினை அனுப்பியுள்ளார் .இதனால் அவர் சைபர் க்ரைம் போலீசில் அந்த நபர் மீது புகார் கூறியுள்ளார் .
அவரின் அந்த புகாரில் “நான் உறுப்பினராக இருக்கும் வாட்ஸ்அப் குழுவிற்கு அதில் உறுப்பினராக இருக்கும் ஒருவரால் ஒரு ஆபாச வீடியோ அனுப்பப்பட்டது, அது வேண்டுமென்றே எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளது” என்று அவர் புகாரில் தெரிவித்தார்.
“நான் உறுப்பினராக உள்ள பல வாட்ஸ்அப் குழுக்களில் இந்த குழுவிற்கு மட்டுமே இந்த ஆபாச வீடியோ அனுப்பப்பட்டது. , இந்த வீடியோ என் போனுக்கு வந்தபோது என்னருகில் போனில்லை ,நான் அப்போது தூங்கிக்கொண்டிருந்தேன்” என்று துணை முதல்வர் மேலும் கூறினார்..
அவரின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கும் , பொதுமக்கள் முன்னிலையில் தன்னைப் பற்றிய தவறான பிம்பத்தை உண்டாக்குவதற்கும் இதுபோன்ற பல வேலைகள் சமீபகாலமாக நடந்துவருகின்றன என்று அவர் கூறினார், மேலும் இதுபோன்ற சைபர் க்ரைம் குற்றவாளிகள் அனைவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

“அதிகாலையில் வந்த ஆபாச வீடியோ” – கோவா துணை முதல்வர் வாட்ஸ் அப் க்ரூப்பில் அனுப்பிய மர்மநபர்.