காதலனுடன் பேசிக்கொண்டிருந்தபோது தொல்லை செய்ததால் ஆத்திரம்- 3 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்

 
baby leg

உத்தரப்பிரதேசத்தில் காதலனுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த 3 வயது மகனை கழித்த நெரித்துக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.

காதலனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, ​​தொடர்ந்து அழுதுகொண்டிருந்த 3 வயது மகனை உத்தரப் பிரதேசப் பெண் கழுத்தை நெரித்துக் கொன்றார்.

சௌலி கிராமத்தில் மருந்துக் கடை நடத்தி வருபவர் கிருஷ்ண முராரி குப்தா. இவரது மனைவி ரூச்சி ஜிண்டால் . இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. ரூச்சி ஜிண்டாலுக்கும், அவரது மைத்துனரான கோவிந்த் குப்தா என்பவருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்துள்ளது. கிருஷ்ண முராரி கடைக்கு சென்ற பின் ரூச்சி கோவிந்த் குப்தாவுடன் அடிக்கடி தொலைப்பேசியில் அரட்டை அடிப்பது வழக்கம். அதேபோல் ஜூன் 28 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்துபோட்டுவிட்ட வந்த குழந்தை, அழுதுகொண்டே இருந்துள்ளது. ஆனால் அதனை கண்டுக்கொள்ளாமல் ரூச்சி தொடர்ந்து போனில் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், அழுது கொண்டே இருந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. ஆனால் கணவனுக்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என நினைத்து, தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாக கிருஷ்ண முராரி குப்தாவுக்கு தொலைப்பேசியில் தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து இருவரும் மதுராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதால் குழந்தை மரணமடைந்ததாக நம்பி, அவர்களது குடும்பத்தினர் குழந்தையின் உடலைப் புதைத்தனர். ஒரு மாதத்திற்கு பின் ருச்சி, மீண்டும் கோவிந்த் குப்தாவுடன் தொலைப்பேசியில் உரையாடியபோது, குழந்தையை “நானே கொன்றேன்” எனக் கூறியதாக தெரிகிறது. இதனை மறைந்திருந்து கேட்ட கிருஷ்ண முராரி குப்தா, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டி எடுக்கப்படும் என்றும், அதன் முடிவுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மஹாவன் துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் ராய் தெரிவித்தார்.