"84 வயசுல 11 முறையா ?" -உடம்பு தெம்பாயிருக்க ஒரு தாத்தா பண்ண வேலைய பாருங்க.

 
mask man

பீஹாரில் சுகாதார அதிகாரிகளை ஏமாற்றி, 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய முதியவர், 12வது முறை தடுப்பூசி போட வந்தபோது பிடிபட்டார்.

COVID-19

பீஹாரில் உள்ள  மாதேபுரா மாவட்டம், ஒரய் கிராமத்தில் 84 வயதான பிரம்மதேவ் மண்டல் என்பவர் வசித்து வந்தார் .நம்மூரில்  கொரானா தடுப்பூசியை ஒரு முறை போடவே பயப்படுவோர் மத்தியில் ,பதினோரு முறை திருட்டுத்தனமாக போட்டுகொண்டு எல்லோரையும் ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 
அவர்  2021, பிப்ரவரி 13 துவங்கி அக்டோபர் வரை பல இடங்களில் தடுப்பூசி போட்ட விபரத்தை, தேதி வாரியாக கூறியுள்ளார்.தன் உடம்பு தெம்பாக இருக்க அடிக்கடி தடுப்பூசி போட்டுக் கொண்டதாக  பிரம்மதேவ் சாதாரணமாக தெரிவித்து உள்ளார்.

பிரம்மதேவ், தடுப்பூசி சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அதில், ஆதார் அட்டை, தன் மொபைல்போன் எண் வாயிலாக எட்டு முறையும், வாக்காளர் அடையாள அட்டை, தன் மனைவியின் மொபைல்போன் எண் வாயிலாக மூன்று முறையும் தடுப்பூசி போட்டுள்ளார். வழக்கமாக தடுப்பூசி சிறப்பு முகாம்களில் ஆதார் தகவல், மொபைல் எண் ஆகியவற்றை பெற்று, தடுப்பூசி செலுத்தி அனுப்பி விடுவர். அதன் பின் அலுவலகம் சென்று தான் அந்த தகவலை வலைதளத்தில் பதிவேற்றுவர்.
அப்போது, ஏற்கனவே இரு முறை தடுப்பூசி போட்ட விபரம் தெரிந்து, கணினி தன்னிச்சையாக அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விடும். இந்த நடைமுறை காரணமாகவே, பிரம்மதேவ் பலமுறை தடுப்பூசி போட்டும் சிக்கிக் கொள்ளாமல் இருந்துள்ளார்.அவர் மீண்டும் பன்னிரெண்டாவது முறை ஊசி போட வந்தபோது சிக்கி கொண்டார் .