கடையை காலி செய்யச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி! – கும்பகோணத்தில் அதிர்ச்சி

 

கடையை காலி செய்யச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி! – கும்பகோணத்தில் அதிர்ச்சி

கும்பகோணத்தில் மடத்துக்கு சொந்தமான கடையை காலி செய்யச் சொன்ன மேலாளரை பா.ஜ.க நகர தலைவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் என்ன செய்யப் போகின்ற என்ற கேள்வியை சமூகவலைதளவாசிகள் எழுப்பி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் மடவிளாகம் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கோபாலன் (65). ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பொறுப்பாளராக இருந்தவர். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஶ்ரீஶ்ரீ108 அபினவ உத்தராதி மடத்தின் மேலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்த மடத்துக்கு கும்பகோணம் மற்றும் நாச்சியார்கோவில் பகுதியில் நிறைய சொத்துக்கள் உள்ளது. இதை கோபாலன் நிர்வகித்து வந்துள்ளார்.

கடையை காலி செய்யச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி! – கும்பகோணத்தில் அதிர்ச்சிமடத்துக்கு சொந்தமான கடையில் சரவணன் (43) என்பவர் தையல் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் அந்த நகர பா.ஜ.க தலைவராகவும் உள்ளார். பல ஆண்டுகளாக ஒழுங்காக வாடகை செலுத்தாத காரணத்தால் கடையை காலி செய்து தரும்படி கோபாலன் கூறியுள்ளார். இதில் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. கடைசியாக ரூ.2 லட்சம் தருகிறேன் கடையை காலி செய்து செல்லும்படி சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளார் கோபாலன். ஆனால் என் அப்பா நடத்திய கடையை நான் இப்போது நடத்தி வருகிறேன். பல ஆண்டுகளாக இந்த இடத்தை நாங்கள் நிர்வகித்து வருகிறோம். எனவே, நீதிமன்றம் சென்றால் கூட எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் கூறி கடையை காலி செய்ய மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடியுள்ளார் கோபாலன்.

கடையை காலி செய்யச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி! – கும்பகோணத்தில் அதிர்ச்சிநீதிமன்றத்தில் சரவணன் கடையை காலி செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கோபாலனை சந்தித்த சரவணன், கடையை காலி செய்தால் ரூ.2 லட்சம் தருவதாக கூறினீர்களே, இப்போது கடையை காலி செய்கிறேன். அதனால் ரூ.2 லட்சம் தாருங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கோபாலன், அது நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பு சொன்னது. இப்போது நீதிமன்றத்தில் தீர்ப்பே வந்துவிட்டது. உடனடியாக கடையை காலி செய்து ஒப்படைக்க வேண்டும், இல்லை என்றால் கடையை காலி செய்து, பொருட்களை வெளியே வைத்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.

கடையை காலி செய்யச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி! – கும்பகோணத்தில் அதிர்ச்சிஇந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டு வாசலில் கோபாலன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரவணன், கோபாலன் முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். அலறியடித்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார் கோபாலன். அக்கம்பக்கத்தினர் வரவே சரவணன் தப்பிவிட்டார்.
அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, கோபாலனை அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், பா.ஜ.க நிர்வாகியை கைது செய்தனர்.
பொதுவாக இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்கப்பட்டாலே பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்கி கொலை செய்துவிட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் கண்ணீர் விடுவது குறிப்பிட்ட கட்சி ஐ.டி விங்கைச் சேர்ந்தவர்களின் வழக்கம். தற்போது கொலை செய்யப்பட்டவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் முன்னாள் நிர்வாகி, கொலை செய்தது பா.ஜ.க நிர்வாகி. கொலை செய்யப்பட்டவருக்கு நீதி கிடைக்க பா.ஜ.க-வினர் பொங்குவார்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.