பழிக்கு பழி... பிரபல யூடியூபரை வெட்டிக் கொன்ற கணவர் படுகொலை

 
பழிக்கு பழி... பிரபல யூடியூபரை வெட்டிக் கொன்ற கணவர் படுகொலை

தெலங்காணா மாநிலத்தில் பிரபல யூடியூபர் வைஷ்ணவி கணவனால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 
மார்ச் 17, 2026 அன்று, வைஷ்ணவி தனது இல்லத்தில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், காவல்துறை ஹரி பாபுவைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது. விசாரணையில் ஹரி பாபு தனது தாய் மற்றும் சகோதரர்களின் தூண்டுதலின் பேரில், கூடுதல் வரதட்சணை கேட்டு வைஷ்ணவியை துன்புறுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பின்னர் ஹரி பாபு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார், ஆனால் அவர் மீதான வழக்கு நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தன. 

இதனையடுத்து ஹரி பாபு நிஜாமாபாத்தில் தனது தாயுடன் வசித்து,  மக்காச்சோளம் விற்று வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமையன்று, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் காரில் வந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஹரி பாபுவை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். தாக்குதலில் ஹரி பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் வைஷ்ணவியின் உறவினர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் சந்தேகிப்பதாக காவல்துறை கூறியுள்ளது.  ஹரி பாபுவின் கொலை தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.