அறைக்குள் மணமகளின் அலறல்! ஜன்னல் வழியாக பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் உடல்கள்

 
அச்ச்

 அறைக்குள் இருந்து மணமகள் அலறல் சத்தம் கேட்க, அனைவரும் ஓடி சென்று கதவை தட்ட, கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்கள் புதுமண தம்பதிகள்.

 சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைநகர் ராய்ப்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்திருக்கிறது.   திக்ரபாரா காவல் நிலையத்திற்கு உட்பட பகுதியான பிரிஜ்நகரில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி  நேற்று மாலை நடந்திருக்கிறது.  இந்த நிகழ்ச்சிக்கு சற்று நேரத்திற்கு முன்பு புதுமண தம்பதிகள் இருந்த அறைக்குள் இருந்து மணமகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது.  

அச்ச

 இதைக் கேட்ட திருமண வீட்டார் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு அந்த அறை பக்கம் சென்றிருக்கிறார்கள் .  அறைக்கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறார்கள் . அப்போது அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.   புதுமணத் தம்பதிகள் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்கள்.

உடனே திக்ரபாரா போலீசுக்கு தகவல் சொல்லவும்,  போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்துக்கொண்டு  உள்ளே சென்றபோது இருவரும் கத்தி காயங்களுடன் சடலமாக கிடந்திருக்கிறார்கள்.  திருமண தம்பதிகள் இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மணமகன் அஸ்லாம்(24),  மனைவி கஹ்காஷா பானோ(22)யை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பின்னர் தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  

 இதன் பின்னர் போலீசார்  இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.   வரவேற்புக்கு தயாராகிக் கொண்டிருந்த உறவினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போய் கொண்டு இருக்கிறார்கள்.

 கணவன் மனைவிக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் கணவனே மனைவியை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்  தெரிய வந்திருக்கிறது.   ஆனாலும் தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.