தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை

 
murder

தூத்துக்குடி முருகேசன் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த இளம் ஜோடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

murder

தூத்துக்குடி முருகேசன் நகரில் வசித்துவந்தவர்கள் மாரிச்செல்வம் - கார்த்திகா ஜோடி. பல ஆண்டுகளாக காதலித்துவந்த இந்த இளம் ஜோடி கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு வாடகை வீட்டில் வசித்துவந்தனர். இந்நிலையில் இன்று மாலை அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 6 பேர் , இருவரையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இளம் தம்பதியின் அலறல் சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர், சம்பவம் குறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

கார்த்திகாவின் உறவினர்கள் இக்கொலையில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற தூத்துக்குடி நகர டிஎஸ்பி சத்யராஜ், புறநகர் டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இருசக்கர வாகனங்களில் வந்து கொலைகளை அரங்கேற்றிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.