7 மாத கர்ப்பிணி காதலி கொலை- காதலன் கைது

 
7 மாத கர்ப்பிணி காதலி கொலை- காதலன் கைது

சேலத்தில் தன்னை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாக புகார் அளித்த பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

சேலம் எடப்பாடி அருகே கோணசமுத்திரத்தை சேர்ந்த கோகிலா (23) என்பவர் திருமணமாகாமல் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்பத்திற்கு அம்மாசி (26) என்பவர்தான் காரணம் என்று சங்ககிரி மகளிர் காவல்நிலையத்தில் கோகிலா புகார் அளித்துள்ளார். காவல்நிலையத்தில் திருமணம் செய்துகொள்வதாக கூறிய அம்மாசியுடன் கோகிலாவை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் கோகிலாவை காணவில்லை என கொங்கணாபுரம் காவல்நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்துள்ளார். இந்தசூழலில் இன்று வெள்ளாளபுரத்தில் விவசாயக் கணற்றில் சாக்கு மூட்டையில் இருந்து கோகிலா சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி காவல் துறையினர் அனுப்பிவைத்த சூழலில், கோகிலாவை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்றுள்ளார் அவரது காதலன் அம்மாசி. திருமணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் துப்பட்டாவால் கழுத்தை கொலை செய்ததாக அம்மாசி ஒப்புக்கொண்டதையடுத்து அவரை கொங்கணாபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.