ஆசிடை எடுத்த கணவன் -அலறிய மனைவி -அடுத்து ஆசிடை எங்கே ஊற்றினார் தெரியுமா ?

 

ஆசிடை எடுத்த கணவன் -அலறிய மனைவி -அடுத்து ஆசிடை எங்கே  ஊற்றினார் தெரியுமா ?

மனைவியின் வாயில் ஆசிடை ஊற்றி கொடுமை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் ஒருவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்தார் .அவருக்கும் அந்த பெண்ணுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது .மேலும் அவர் மதுவுக்கு அடிமையானவர் .அதனால் அடிக்கடி மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போடுவார் .

ஆசிடை எடுத்த கணவன் -அலறிய மனைவி -அடுத்து ஆசிடை எங்கே  ஊற்றினார் தெரியுமா ?

கடந்த வாரம் ஒருநாள் அந்த கணவர் ஆசிட் வாங்கிவந்தார் .பிறகு  தனது மனைவியை ஆசிடை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார் . அதற்கு அந்த பெண் மறுத்து வீட்டுக்குள் ஓடினார் .ஆனால் அந்த கணவன் விடாமல் துரத்தி அந்த மனைவியை பிடித்து அவரின் வாயை திறக்க வைத்து வலுக்கட்டாயமாக அந்த ஆசிடை அவரின் வாயில் ஊற்றினார் ,.இதனால் அந்த பெண் கடுமையான தீக்காயத்துக்கு ஆளானார் .பிறகு அந்த பெண்ணின்   உட்புற உறுப்புகளில் தீக்காயங்களுக்கு ஆளானது , அதனால் அவர்  சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.பின்னர் இந்த கொடுமை பற்றி பெண்கள் ஆணையத்தில் புகார் கூறப்பட்டது.  இந்த தகவலை செவ்வாயன்று  டெல்லி பெண்கள் ஆணையத்தின் (டி.சி.டபிள்யூ) தலைவர் சுவாதி மாலிவால் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார் ., ஆனால் குற்றம் சாட்டப்பட்டஅந்த கணவர்  இதுவரை கைது செய்யப்படவில்லை .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்