தாய்ப்பால் கேட்ட 2 மாத குழந்தை அடுப்பில் தூக்கிப்போட்டு எரித்த கொடூர தாய்
பசிக்கு தாய்பால் கேட்டு தாயிடம் அழுது அடம் பிடித்த இரண்டு மாத குழந்தைக்கு வாயில் துணியை வைத்து அடுப்பில் எரித்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரா, மமதா தம்பதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத் துன்டிகள் பகுதியில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மாத ஆண் குழந்தை உள்ளது. ராஜேந்திரா வேலைக்கு சென்று இருந்த நிலையில், இரண்டு மாத குழந்தை பசியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தாய்ப்பால் கேட்டு தாயிடம் அழுது கொண்டு இருந்தது. தாய் பால் கேட்டு அழுத குழந்தையில் வாயில் துணியை வைத்து அடைத்து அழுகையை நிறுத்த முயன்றிருக்கிறார். ஆனால் குழந்தை வேறு வகையில் அசைந்து, கை கால்களை உதறி தாயிடம் பால் கேட்டு அழுததால் மேலும் ஆத்திரம் அடைந்த மமதா கொடூர தாயாக மாறி பெற்ற மகனென்றும் பார்க்காமல் கை, கால்களை கட்டி வீட்டில் அடுப்பில் சோறு சமைப்பதற்காக இருந்த விறகு அடுப்பில் பெற்ற மகனை தூக்கிப்போட்டு அருகில் பிரம்மை பிடித்தவர் போல் உட்காந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அழ இயலாத வகையில் வாயில் அடைக்கப்பட்டிருந்த துணி, அசைய இயலாத வகையில் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறு ஆகியவை குழந்தை தீயில் எரிந்து கொண்டுருந்தது. இந்த நிலையில் அங்கு வந்த ராஜேந்திரா விறகு அடுப்பில் மகன் வெந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பாசத்துடன் பாலூட்டி சீராட்டி வளர்க்க வேண்டிய தாய் பாலுக்காக அழுத குழந்தையை அடுப்பில் வீசி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மயங்கி சரிந்தார். சற்று நேரத்தில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட ராஜேந்திரா அளித்த தகவல் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் அந்த கொடூர தாய் மமதாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர். வீட்டில் சோறு வேக வேண்டிய அடுப்பில் வெந்து இறந்து போன குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

