மாமியார், மாமனாரை முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து கொன்ற மருமகள்! கள்ளக்காதலால் வெறிச்செயல்

 
க்ஷ்


தனது கள்ள உறவை கணவனிடம் சொல்லிவிட்டதால் முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட் கலந்து மாமனார் ,மாமியாரை கொலை செய்திருக்கிறார் மருமகள் . இதில்  அந்த முள்ளங்கி சாம்பாரை சாப்பிட்ட பக்கத்து வீட்டு  சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான் . மேலும் இரண்டு சிறுவர்களும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  அந்த இளம் பெண் கள்ளக்காதலனுடன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

 கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் அருகே உள்ளது இளங்கியனூர் கிராமம்.  இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன்.  60 வயதான இந்த முதியவரின் மனைவி கொளஞ்சியம்மாள்.  இந்த தம்பதியின் மகன் வேல்முருகன்.  இவருக்கு விருத்தாசலம் தங்கமணி கார்டன் பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற போலீஸை பூமாலையின் மகள் கீதாவுடன் திருமணம் நடந்திருக்கிறது. 

ப்

 கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட வேல்முருகனுக்கும் கீதாவுக்கும் 12 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  வேல்முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் விருத்தாச்சலத்தில் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் என்கிற 43 வயது வாலிபருடன் கீதாவுக்கு கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.

 இந்த கள்ள உறவு காதல் விவகாரம் கீதாவின் மாமியார் கொளஞ்சிஅம்மாளுக்கு தெரிய வந்திருக்கிறது.  இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வெளிநாட்டில் இருக்கும் கீதாவின் கணவர் வேல்முருகனுக்கு போன் செய்து விவரத்தை கூறி இருக்கிறார்.  மாமியாரால் தனது கள்ள உறவு அம்பலப்பட்டு விட்டது.  இனி கணவனுடன் நிம்மதியாக வாழ முடியாது என்று ஆத்திரமடைந்த கீதா,  மாமியாரை பழி தீர்க்க முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட் கலந்து இருக்கிறார்.

 அதை கொளஞ்சி அம்மாளோடு சுப்பிரமணியனும்  சாப்பிட்டு இருக்கிறார்.  அது மட்டுமல்லாமல் கொளஞ்சியம்மாளின் பேரன் சரவணன் அந்த சாம்பாரை சாப்பிட்டு இருக்கிறார் .  பக்கத்து வீட்டைச் சேர்ந்த நித்தீஸ்வரன் என்கிற எட்டு வயது சிறுவனும் பிரியதர்ஷினி என்கிற நாலு வயது சிறுமியும் அந்த முள்ளங்கி சாம்பார் சாப்பிட்டிருக்கிறார்கள் .

கொஞ்ச நேரத்தில் சுப்பிரமணியன்,  கொளஞ்சியம்மாள்,  சரவண கிருஷ்ணன்,  நித்தீஸ்வரன் , பிரியதர்ஷினி எல்லோருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டிருக்கிறது.  அதிர்ச்சி அடைந்த பகுதியினர் அனைவரையும் கூத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்காக சேர்த்திருக்கிறார்கள்.  பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.

 கடந்த 2021 ஆம் ஆண்டில் டிசம்பர் 29ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.   முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கொளஞ்சியம்மாள் 2022 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் நாலாம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அதன் பின்னர் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்ரமணியனும் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நித்தீசுவரனும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். 

 இரண்டு மாதங்களுக்கு பின்னர் பிரேத பரிசோதனை முடிவில் தான் எலி பேஸ்ட் கலந்த முள்ளங்கி சாம்பாரை சாப்பிட்டதில் மூன்று பேரும் உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது.  இதன் பின்னர் வேல்முருகனின் மனைவி கீதா போலீசாரிடம் விசாரணை நடத்தி வேல்முருகனின் மனைவி கீதாவையும் புது குப்பம் வெங்கடேசன் மணமகன் ஹரி கிருஷ்ணனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.