ஜோசியக்காரர் மூலம் வந்த சோதனை- தாயும் ,மகளும் அடுத்தடுத்து இறந்த கொடுமை .

 
death


ஒரு ஜோஸ்யரின் பேச்சை நம்பி ஒரு தாயும் மகளும் இறந்த கொடுமை நடந்துள்ளது 

 suicide
தமிழகத்தின் கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையம் ஜல்லிகாட்டில் வசிக்கும் 58 வயதான தனலட்சுமி கணவரில்லாமல்  32 வயதான மகன் சசிக்குமார் மற்றும்  30 வயதான மகள் சுகன்யாவுடன் வசிக்கிறார் .மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் அந்த தாய் அவருக்கு கல்யாணம் செய்யாமல் கவனித்து வந்தார் .
இந்நிலையில் அந்த தாய் அந்த ஊரில் உள்ள ஜோசியரிடம் சென்று ஜோசியம் பார்த்தார் . அப்போது அந்த ஜோசியர் இன்னும் சில நாட்களில் அந்த பெண் பக்கவாதம் வந்து படுத்து விடுவார் என்று கூறியுள்ளார் .இதனால் அதிர்ச்சியான அந்த தனலட்சுமி வீட்டுக்கு வந்து மகனுக்கு போன் செய்து ,ஜோசியர் கூறியதை சொல்லி வேதனைப்பட்டார் .பின்னர் தனக்கு பிறகு தன் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லையே என்று ஜோசியர் கூறியதை நினைத்து ,மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார் .பின்னர் அவரின் மகன் வீட்டுக்கு வந்து இருவரின் மரணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார் .பிறகு அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.