"15 வயது சிறுவனை கொன்று புதைத்த 17 வயது சிறுவன்" -காரணத்தை கேட்டா கதறுவிங்க .

 
murder


தங்கையை காதலித்த 15 வயதான சிறுவனை கொன்று புதைத்த 17 வயதான சிறுவன் உள்பட இருவரை போலீசார்  கைது செய்தனர் .

UP: Miffed over ‘affair’, minor girl’s 2 brothers strangle 15-year-old boy to death, bury body in sugarcane field [Representative image]
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு கிராமத்தில் 9ம் வகுப்பில் படிக்கும் 15 வயதான சிறுவன்  ஃபரீக் அகமது அதே பகுதியில் வசிக்கும் ஒரு மைனர் பெண்ணை காதலித்து வந்தார் .இந்த காதல் விவகாரம் அந்த காதலியின் 17 வயதான சகோதரனுக்கு  தெரிய வந்தது .இதனால் அவர் தன்னுடைய மற்றொரு சகோதரனை அழைத்து கொண்டு அந்த 15 வயதான சிறுவனிடம் தங்களின் தங்கையுடனான காதலை மறந்து விடுமாறும் ,மீறினால் விளைவுகள் விபரீதமாக இருக்குமென்றும் மிரட்டினர் .
அதை கேட்டு அந்த சிறுவன் பயப்படாமல் மீண்டும் மீண்டும் அவர்களின் தங்கையோடு பழகி வந்தார் .இதனால் கோவப்பட்ட அந்த 17 வயதான சிறுவனும் மற்றொரு சகோதரனும் சேர்ந்து  அந்த 15 வயதான சிறுவனை ஒரு கரும்பு காட்டுக்கு கூட்டி சென்றார்கள்  .அங்கு அந்த சிறுவனை கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு ,அவரின் உடலை மண்ணில் புதைத்து விட்டனர் .
அதன் பிறகு இறந்த சிறுவனின் உறவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி அந்த இருவரையும் கைது செய்தனர் .மேற்கொண்டு சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .