6 பேர்.. 6 மாதம்.. மனநலம் பாதித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

 
ll

 மனநலம் பாதித்த 30 வயது இளம்பெண்ணை ஆறு பேர் சேர்ந்து ஆறு மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  இதில் அந்தப் பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றிருக்கிறார்.  தற்போது குழந்தை காப்பகத்தில் வளர்ந்து வருகிறது.

 மதுரை மாவட்டத்தில் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அந்த மனநலம் பாதித்த 30 வயது இளம்பெண் பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார் .  பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் அந்த இளம் பெண்ணை ஆறு பேர் சேர்ந்து ஆசை வார்த்தை சொல்லி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.  அந்த ஆறு பேரும் தனித்தனியாக  ஆறு மாதங்களாக அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்கள்.   இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்து இருக்கிறார். 

k

 மகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை கண்டுபிடித்த பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து இருக்கிறார்கள்.  அப்போது தங்களது மகள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.  அதன் பின்னர் பெற்றோர் நாகமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  

 இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், முருகன் ,பழனிவேல், விக்னேஸ்வரன் ,நாகப்பாண்டி முனியாண்டி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.   இது குறித்து  வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

 கடந்த 2012 ஆம் ஆண்டில் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.   இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பு வழங்கியுள்ளார்.   குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் வழக்கு விசாரணையின் போது முருகன் என்பவர் இறந்து விட்டதால்,  மற்ற ஐந்து பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் .

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பமடைந்தது பெண் குழந்தை பெற்றிருக்கிறார்.   இந்த குழந்தை தற்போது ஒரு காப்பகத்தில் வளர்ந்து வருகிறது.