டியூசன் சென்டரில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கணித ஆசிரியர் சிறையிலடைப்பு

 
gg

டியூசனுக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து  கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

 நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் அருகே உள்ளது சிங்கம்பாறை.  இப்பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பனிராஜ்.   இவரின் மகன் சகாய டெல்பின் ராஜ்.  32 வயதான இந்த வாலிபருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. 

t

 தான் வசித்து வரும் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிகமாக கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  பள்ளி நேரம் போக வீட்டில் இவர் டியூஷன் சென்டர் நடத்தி வந்திருக்கிறார்.  தன்னிடம் டியூசனுக்கு படிக்க வந்த மாணவி ஒருவருக்கு கணித ஆசிரியர் சகாய டெஸ்ட் பின் ராஜ் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். 

 அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்று இருக்கிறார்.  இதில் அதிர்ச்சி அடைந்த மாணவி,  அவரிடமிருந்து தப்பித்து சென்றிருக்கிறார்.  வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் இது குறித்து சொல்லியிருக்கிறார் .

அதை கேட்ட பெற்றோர் ஆத்திரமடைந்து   மகளை அழைத்துக் கொண்டு சேரன் மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று கணித  ஆசிரியர் சகாய டெம்பிள் ராஜ் மீது புகார் கொடுத்துள்ளனர்.  புகாரின் பேரில் சேரன் மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஜென்சி,  சகாய டெம்பிள் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்