திருமணமான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தவெக நிர்வாகிக்கு அடி, உதை

 
திருமணமான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தவெக நிர்வாகிக்கு அடி, உதை

திருமணமான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகிக்கு அடி, உதை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணம் ஆன இளம்பெண்ணுக்கு கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை அளித்த கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷை பாதிக்கப்பட பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக அடித்து, உதைத்தனர். பாலியல் தொந்தரவு அளித்ததோடு இன்று அப்பெண்ணை கடத்த முயன்ற போது சிக்கியுள்ளார். குளித்தலை போலீசில் புகாரளித்தும் அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை, பணம் ஆகியவற்றை மோசடி செய்து தவெக பிரமுகர் ஜெய் கிருஷ்ணா தப்பிசென்றுள்ளார். ஆந்திராவில் பதுங்கிய தவெக பிரமுகர் ஜெய் கிருஷ்ணாவை திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.