7வயது சிறுமிக்கும் 38 வயது வாலிபருக்கும்.. ரூ.4.50 லட்சத்திற்கு நடந்த விற்பனை

 
ச்

7 வயது சிறுமியை 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி திருமணம் செய்திருக்கிறார் 38 வயது வாலிபர்.  ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .  அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலால் அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தோல்பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது மணியா.  இப்பகுதியைச் சேர்ந்தவர் பூபால் சிங் .   கடந்த 21ஆம் தேதி அன்று இந்த வாலிபர் 7 வயது சிறுமியை திருமணம் செய்து இருக்கிறார் .

ல்

தகவல் அறிந்த போலீசார் அங்கே விரைந்து சென்று தங்களுக்கு வந்த புகார் உண்மையா என்பது குறித்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள் .  போலீசாரின் விசாரணையில் அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது .  அந்த 7 வயது சிறுமியை திருமணம் செய்வதற்காக அவரின் தந்தையிடம் 4,50,000 பணம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்தது தெரிய வந்திருக்கிறது . 

இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த போலீசார் இந்த சிறுமியை உடனே மீட்டுள்ளனர்.  பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.   7 வயது சிறுமியை 4.50,000 விலை கொடுத்து வாங்கி 38 வயது வாலிபர் ஒருவர் திருமணம் செய்திருக்கும் செய்தி ராஜஸ்தான் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.