"கிழிஞ்சு தெரியற இடத்தை வீடியோ எடுத்து ரசிக்கிறானுங்களே.." -ஒரு பெண்ணுக்கு நடுரோட்டில் பலரால் நேர்ந்த கதி

 
cellphone cellphone

நிலத்தகராறில் ஒரு  பெண்ணை தாக்கி,அவரின் உடலை  ஆபாசமாக வீடியோ எடுத்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியின பெண்ணை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்த 9 பேர் மீது வழக்கு

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா குரிபல்லா கிராமத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கும், அந்த கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று பிரச்சினைக்கு உரிய நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அளந்து கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பல வாலிபர்கள் அந்த இடத்திற்கு வந்து ,அந்த பெண்ணை அதிகாரிகள் முன்பே தாக்கி அந்த இடத்தை அளக்க விடாமல் தகராறு செய்தனர் .அந்த பெண் பலரால் தாக்கப்படுவதையறிந்த அந்த பெண்ணின் சகோதரி அந்த இடத்திற்கு வந்து தன் தங்கையை காப்பாற்ற போராடினார் .அப்போது அந்த வாலிபர்கள் காப்பாற்ற வந்த பெண்ணை தாக்கி அவரின் ஆடைகளை கிழித்தனர் .அப்போது அவரின் உடல் பாகங்கள், ஆடைகள் கிழிந்ததால் வெளியே தெரிந்தது .அதை பார்த்த அந்த பகுதி வாலிபர்கள் அந்த உடல் பாகங்களை தஙகளின் செல்போனில் படம் பிடித்து அதை ரசித்தனர் .இதனால் அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார்
   அந்த புகாரின்பேரில் அந்த கிராமத்தை சேர்ந்த சந்தீப், சந்தோஷ், குலாபி, சுகுணா, குஷ்மா, லோக்யா, அனில், லலிதா, சன்னகேசவா ஆகிய  9 பேர் மீதும் பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.