"கல்யாணம் பண்ணி காப்பகத்துக்கு அனுப்பிட்டிங்களே.." -புது பெண்ணுக்கு நேர்ந்த கதி

 
rape

ப்ளஸ் டு படிக்கும் மாணவியை கட்டாய திருமணம் செய்து கொண்ட குடும்பத்தினரை போலீஸ் கைது செய்தது. 

marriage
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் சோளக்கொட்டாயை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். இவருக்கு தொடர்ந்து படிக்க ஆசையிருந்தாலும் ,அவரின் வீட்டில் உள்ளோர் அவருக்கு உடனே கல்யாணம் செய்ய முடிவெடுத்து ,மாப்பிள்ளை பார்த்து விட்டனர் 
இதனால் கடந்த நவம்பர் 15ம் தேதி அந்த மாணவிக்கும்,  பெரிய குரும்பபட்டியை சேர்ந்த உறவினரான 23 வயதான முனியப்பன் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த  திருமணத்தால் அந்த பிளஸ் டூ மாணவி மிகவும் மன உளைச்சலாகி, இது பற்றி பலரிடம் அழுது புலம்பினார் .இதை கேள்விப்பட்ட ஒருவர் இந்த பெண்ணுக்கு உதவ முன்வந்து குழந்தைகள் நல வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர் .
இதனால் அந்த சைல்டு லைன் அமைப்பின் அதிகாரிகள் அந்த மணப்பெண்ணின் வீட்டுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள் .அப்போது அந்த புதுப்பெண் தனக்கு கட்டாய திருமணம் நடத்தி வைத்த உண்மையை அவர்களிடம் கூறி அழுது புலம்பினார் .
உடனே அந்த அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் அந்த பெண்ணை இப்படி கட்டாய  திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை முனியப்பன்  மற்றும் அவரின் உறவினர்கள் பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .பின்னர் அந்த அந்த புதுப்பெண் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்