ஆண்மை பரிசோதனையால் ஆத்திரம்! மனைவி, மாமியார் சரமாரி குத்திக்கொலை! வெட்டுக்காயங்களுடன் தப்பிய மாமனார்

 
k

முதலிரவு அறையில் மனைவியை தொடாமல் தூங்கியதால்  ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்து மனைவியையும் மாமியாரையும் சரமாரி குத்தி கொலை செய்திருக்கிறார் இளைஞர்.   வெட்டு காயங்களுடன் தப்பி ஓடி உயிர் பிழைத்திருக்கிறார் மாமனார்.  இந்த  சம்பவத்திற்கு மாப்பிள்ளையின் தந்தை உடந்தையாக இருந்திருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் சென்னம்மா சர்க்கிள் பகுதியில் வசித்து வந்தவர் பிரசாத் . இவர்  மனைவி கிருஷ்ணவேணி . தம்பதியின் மகன் சரவணன் பி. டெக் படித்து முடித்துள்ளார்.  சில மாதங்களுக்கு முன்பாக ஹைதராபாத் வங்கியில் சரவணனுக்கு வேலை கிடைத்திருக்கிறது.  இதன் பின்னர் சரவணனுக்கும் தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி பகுதியைச் சேர்ந்த ருக்மணி என்ற இளம் பெண்ணுக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.  கடந்த 1ம் தேதி அன்றுதான் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.   முதலிரவு அறையில் தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்திருக்கிறார் சரவணன்.  இரண்டு நாட்களாக இப்படியே இருந்திருக்கிறார்.  இதைப்பற்றி ருக்மணி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார் .

j

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்,  சரவணனை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆண்மை பரிசோதனை செய்திருக்கிறார்கள்.   பின்னர் திருமணம் ஆகி இரண்டு நாட்களாகியும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள் என்று சரவணன் பற்றி அக்கம் பக்கத்தில் குறை சொல்லி இருக்கிறார்கள்.  இதையெல்லாம் கேட்டு ஆத்திரமடைந்த சரவணன் பெற்றோருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி இருக்கிறார். 

 தன் மகனை அவமானப்படுத்திய குடும்பத்தை கொன்ற தீர்க்க வேண்டும் என்று சரவணனின் தந்தை பிரசாத் திட்டம் தீட்டியிருக்கிறார்.  அதை அடுத்து கரூரில் உள்ள தங்கள் வீட்டில் வரும்படி எல்லோரையும் அழைத்து இருக்கிறார்.   அதன்படி ருக்மணியும் சரவணனும் நேற்று சென்று இருக்கிறார்கள்.  அவர்களுடன் ருக்மணியின் தந்தை வெங்கடேஸ்வரலுவும் தாய் ரமாதேவி இருவரும் சென்று இருக்கிறார்கள். 

 வீட்டிற்கு சென்றதும் சரவணன் தன் மனைவி ருக்மணியை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றிருக்கிறார்.  அங்கே மாடியில் உள்ள அறையில் சரமாரி வெட்டி கொலை செய்திருக்கிறார்.

 அந்த நேரத்தில் வீட்டின் கீழ் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த ருக்மணியின் தந்தை வெங்கடேஸ்வரலு அவரின் மனைவி ரமாதேவியை சரவணனின் தந்தை பிரசாத்,  கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் வெங்கடேஸ்வரலு கத்தி குத்து காயங்களுடன் வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓடி இருக்கிறார். அவரது மனைவி வெளியே ஓட முடியாமல் வீட்டிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்.  அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார்  பிரசாத். 

 அதற்குள் வெளியே ஓடிய வெங்கடேஸ்வரலு போட்ட அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்க,  போலீசார் விரைந்து வந்து சரவணன் மற்றும் அவரது தந்தை பிரசாத்தை கைது செய்துள்ளனர்.  திருமணம் நடந்த இரண்டே வாரத்தில் மனைவி , மாமியாரை தந்தையுடன் சேர்ந்து வங்கி ஊழியர் கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.