"கள்ள காதலியோடு கண்டபடி இருந்த மருமகன்" -பார்த்த மாமனார் என்ன செஞ்சார் தெரியுமா ?

 
Acid


மருமகனின் கள்ள காதலி மீது ஆசிட் வீசிய மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

wife torture

தமிழகத்தின் கோவையில் உள்ள  செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த  59 வயதான இளங்கோவன் என்பவர் தன் மகளை சந்திரசேகர் என்ற நபருக்கு திருமணம் செய்து கொடுத்தார் .
அதன் பிறகு அந்த மாப்பிள்ளை அம்மன் குளம் பகுதியில் வசிக்கும் ராதா என்ற பெண்ணுடன் கள்ள உறவு கொண்டார் .அதனால் அந்த கணவன்  ராதாவுடன் பழகுவதை தெரிந்து கொண்ட அவரின் மனைவி இது பற்றி தன் தந்தையிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாமனார் இளங்கோவன் அந்த மாப்பிள்ளை சந்திரசேகரை ரகசியமாக கண்காணித்தார் .அப்போது தன் மாப்பிள்ளை ராதாவுடன் பழகுவது அவரை காண்டாக்கியது .இதனால் அவர் அந்த ராதாவை தன் மாபிள்ளையிடமிருந்து பிரிக்க ஒரு திட்டம் தீட்டினார் .அதன் படி ஆசிட் பாட்டிலை வாங்கிக்கொண்டு அந்த ராதா இருக்குமிடத்தை தேடி கண்டுபிடித்து அங்கு சென்றார் .பின்னர் அந்த ஆசிடை அந்த ராதாவின் முகத்தில் வீசி விட்டு ஓடி விட்டார் .இதனால் அந்த ராதா முகம் வெந்து அலறிதுடித்தார் .பின்னர் அக்கம்பக்கத்தினர் அந்த ராதாவை ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .போலீசார் வழக்கு பதிந்து  அந்த இளங்கோவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .