ஒருதலைக் காதலால் விபரீதம்... இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன்!

 
s

காதல் என்ற பெயரில் இளம் பெண்னை  துன்புறுத்தி  கழுத்தை அறுத்துக் கொன்ற காதலனை பொது மக்கள் தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லா நகரில் உள்ள எர்ரசத்யம் காலனியைச் சேர்ந்த ராமச்சந்திரையா மற்றும் ஸ்ரீலதாவின் மூத்த மகளான வைஷ்ணவி (22), தற்போது ஒரு பள்ளியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர் முன்பு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். அப்போது ஐதராபாத்தைச் சேர்ந்த தேஜா (28) என்பவரும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பை காதல் எனக்கூறி தேஜா விருப்பமில்லாவிட்டாலும் வைஷ்ணவியை பின்தொடர்ந்து வந்தார். இந்தச் சூழலில் வைஷ்ணவி ஐதராபாத்தில் இருந்து சொந்த ஊரில் பள்ளியில் வேலை கிடைத்ததால் வந்த பிறகு வீட்டில் பெற்றோர்  வேறு ஒருவருடன் திருமணம் செய்ய  நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதனை அறிந்த தேஜா ஜட்சர்லா வந்தார். சனிக்கிழமையன்று, வைஷ்ணவி பள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, ​​தேஜா அவரை பின் தொடர்ந்து  தன்னுடன் வரும்படி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியூறுத்தி உள்ளார். இதற்கு வைஷ்ணவி மறுத்துவிட்டதால் தன்னுடன் மறைத்து கொண்டு வந்த  கத்தியால் வைஷ்ணவி கழுத்தை அறுத்தான். இதனால் கடும் இரத்தபோக்கு ஏற்பட்ட வைஷ்ணவியை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே  இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

கொலை செய்த தேஜா அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தபோது, ​​நசுருல்லாபாத் சாலை அருகே அப்பகுதி மக்கள் அவரைத் துரத்திப் பிடித்தனர். அவனது கைகளைக் கட்டி, கற்களால் தாக்கினர். படுகாயமடைந்த தேஜாவை போலீசார் மீட்டு மகபூப்நகர் அரசு  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தேஜாவும் இறந்தார். வைஷ்ணவி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.