உறவை துண்டித்த காதலியால் இரவெல்லாம் தூங்காத காதலன் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

 
murder


திடீரென்று காதலை துண்டித்த காதலியை ,அந்த காதலன் நடுரோட்டில் கத்தியால் குத்தி விட்டு ஓடிய சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது 

23-year-old man slashes girlfriend's throat at Dockyard railway station, arrested
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் தலேகானில் மோஹித் அகலே என்ற 23 வயதான வாலிபர் ,அதே பகுதியில் வசிக்கும் 21 வயதான பெண்ணை காதலித்து வந்தார் .அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்தார் .இந்நிலையில்  அந்த பெண்ணுக்கு திடீரென்று அந்த காதலன் மோஹித் அகலேவின் நடத்தை பிடிக்காமல் போனதால் ,அவரின் உறவை துண்டித்து விட்ட்டார் .அதன் பிறகு அந்த மோஹித் அகலே, பலமுறை அந்த பெண்ணுக்கு போன் செய்தாலும் அந்த பெண் அவரின் போனை எடுக்கவில்லை .
மேலும் அந்த பெண், அந்த மோஹித் அகலே,தன் வீட்டுக்கு வந்து விடுவார் என்று பயந்து ,செவ்வரியில் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றார் .அதை பற்றி கேள்விப்பட்ட அவர் அந்த பெண்ணை நேரில் சந்திக்க அங்குள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கு வர சொன்னார் .
அவரின் பேச்சை நம்பி  சென்ற அந்த பெண்ணை அவர் கத்தியால் பலமுறை குத்தி விட்டு ஓடி விட்டார் .பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள்  அருகிலுள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிந்து அந்த மோஹித் அகலே மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்