"ஒருத்தனும் பொண்ணு கொடுக்க மாட்றானே..." -வெறுத்து போன வாலிபரின் வினோத செயலை பாருங்க

 
marriage


கல்யாணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் ஒரு வாலிபர் கட் அவுட் வைத்து பெண் தேடி வரும் சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது 

விநோதம்
இங்கிலாந்து  தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் 29 வயதான  முகமது மாலிக். தனக்கு கல்யாணத்திற்கு பல இடங்களில் பெண் பார்த்தும் சரியாக அமையாததால்,வெறுத்து போய்  ஒரு புது முயற்சியில் இறங்கினார் 
 லண்டன் நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான பர்மிங்காமில் திருமணத்திற்குப் பெண் தேடி பெரிய பேனரையே வைத்துள்ளார் .. அந்த பேனரில்  'அரேஞ்சுடு  மேரேஜிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு  குறிப்பிட்டுள்ளார். மேலும் முஸ்லீம் இளைஞரான தனக்கு வாழ்க்கைத் துணையாக வரும் பெண்  முஸ்லீம் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.. 
இதற்காக அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு கட் அவுட் வைத்து,அதற்கு நிறைய பணமும் கட்டியுள்ளார். 
அவருக்கு  எந்த நாட்டை சேர்ந்தவரும் வாழ்க்கை துணையாகக் கிடைத்தாலும் சரிதான் . ஆனால், பஞ்சாபி குடும்பத்தைத் தேர்ந்த ஒருவர் கிடைத்தால் இன்னும் சிறப்பு என்று அவர் தெரிவித்தார். 
 தனது வாழ்க்கை துணையை  தேர்ந்தெடுக்க  தனியாக ஒரு இணையதளத்தையே தொடங்கிவிட்டார். Findmalikawife என்ற அந்த இணையதளத்தில் அவரின் வேலை ,படிப்பு போன்ற விவரங்களை குறிப்பிட்டு ,இதற்கு பொருத்தமானவர் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார் .