"அரசு அதிகாரின்னு சொல்லி ,அநியாயம் பண்ணிட்டானே" -கோவிலுக்கு சென்ற பெண் கதறல் .

 
temple

சாமி கும்பிட சென்ற பெண்ணிடம் அரசு அதிகாரி எனக்கூறி 7.5 பவுன் செயின் பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

man cheating and rape a women by marriage

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் நெட்டயம் பாளையத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி காளியம்மாள் .இவர் சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பெருமாள் கோவிலுக்கு தனியாக நிறைய நகைகள் அணிந்து கொண்டு சாமி கும்பிட சென்றார் .அப்போது அந்த கோவில் வாசலில் இருந்த ஒரு கோட் போட்ட ஆசாமி அந்த பெண்ணிடம் வந்து ,இந்த கோவிலுக்குள் நகைகள் அணிந்து செல்ல தடை உள்ளது என்றும் ,அதனால் தங்க நகைகளை கழட்டி இந்த கவரில் போடுங்கள் என்று கூறி அவரே அந்த நகைகளை வாங்கி ஒரு கவரில் போடுவது போல் போட்டு, அவரிடம் அந்த கவரை கொடுத்தார் .அந்த பெண் அந்த கவரை அந்த கோவிலிலுக்குள் சென்று பிரித்து பார்த்த போது ,நகைகள் இல்லாமல் வெறும் கவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் .
உடனே அழுது புலம்பிய அந்த பெண் இதுபற்றி அந்த கோவிலில் இருந்த அதிகாரிகளிடம் கூறினார் .உடனே அந்த அதிகாரிகள் அந்த நபர்களை தேடி பார்த்தனர் .அந்த பெண்ணிடம் நூதன முறையில் நகையை பறித்த அந்த நபர்களை அங்கு காணாததால் அவர்கள் அந்த பெண்ணை கூட்டி சென்று போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நூதன முறையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகையை பறித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர் .