"டெல்லியிலே இருக்கேன்னு அவ மடியில இருக்கியே.." -கணவனின் கள்ள காதலை கண்டுபிடித்த மனைவிக்கு நேர்ந்த கதி.

 
murder


கணவனின் கள்ள காதலை கண்டுபிடித்த மனைவியை எட்டாவது மாடியிலிருந்து தள்ளி கொன்ற கணவனை போலீஸ் கைது செய்தது 

Uttar Pradesh: Man pushes wife to death from balcony after she objects to his extramarital affair  [Representative image]
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் கோசைகஞ்ச் பகுதியில் வசிக்கும் 36 வயதான சஞ்சீவ்குமார் 32 வயதான நீது என்ற பெண்ணை கடந்த 2011ம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார் .இப்போது இந்த  தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்  .இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சஞ்சீவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டது .அதனால் அவர் அடிக்கடி மனைவியிடம் டெல்லிக்கு போவதாக சொல்லிவிட்டு அவரின் கள்ள காதலி  வீட்டுக்கு போய் விடுவார் .இதை  அவரின் மனைவி நீது ஒரு நாள் கண்டுப்பிடித்து விட்டு ,அவரிடம் சண்டை போட்டார் .
இதானல் கோவமான  அந்த சஞ்சீவ் அந்த பெண்ணை அந்த அப்பார்ட்மென்டின் எட்டாவது மாடிக்கு கூட்டி சென்று குழந்தைகள் முன்பே அங்கிருந்து கீழே தள்ளி கொலை செய்து விட்டார் .இதுபற்றி அந்த இறந்த பெண்ணின் சகோதரர் போலீசில் புகார் கொடுத்தார் .போலிசார்  வழக்கு பதிந்து அந்த சஞ்சீவை  கைது செய்தனர்