"முறைப்பொண்ணை கட்டி தரமாட்டேங்கிறாங்களே" -அடுத்து வாலிபர் செய்த கொடூரம்

 
murder

புதுமாப்பிள்ளையை கொன்று  மணப்பெண்ணை 3-வது மனைவியாக்க வாலிபர் செய்த சதிச்செயல் அம்பலமானது 

murder

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் வசித்து வந்த மாரிமுத்து என்ற 24 வயது வாலிபர் தனது  உறவினர் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஆசைப்பட்டு பெண் கேட்டார் 
. அப்போது அந்த பெண்ணுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. அதனால் தற்போது திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று அப்போது பெண் வீட்டார் கூறி விட்டனர். 
இதை தொடர்ந்து அவர்  வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்  அந்த பெண்ணுடன் 2 ஆண்டு குடும்பம் நடத்திய பின்னர் அந்த பெண்ணுக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து அந்த பெண் அவரை  விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
பின்னர் மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டபிறகு அவரும் பிரிந்து சென்று விட்டார் .
பிறகு அந்த மாரிமுத்து முதலில் பார்த்த அவரின் உறவுக்கார பெண்ணை மீண்டும் திருமணம் செய்ய கேட்ட போது அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்து அந்த மாப்பிள்ளையை கொல்ல முடிவு செய்தார் . இந்த நிலையில் கடந்த 8-ந் தேதிஅந்த மாப்பிள்ளை செல்வகணேஷை அடித்து கொலை செய்து  விட்டதால் போலீசார் அந்த மாரி முத்துவை கைது செய்தனர்.