"ஏண்டா என் மனைவியை தப்பா பேசுறே?" -அடுத்து மதுபோதையில் நண்பணுக்கு நேர்ந்த விபரீதம்

 
drunk

தன் மனைவியை பற்றி தரக்குறைவாக பேசிய நண்பரை ஒரு வாலிபர் கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார் .

liquor


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆனந்தபூரில் 36 வயதான பிஸ்வஜித் ஜனா என்பவரும் 31 வயதான மொண்டல் என்பவரும் நணபர்களாக இருந்தனர் .இதில் ஜனா ஒரு ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார் .இந்நிலையில் அந்த நன்பர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர் .அப்போது அந்த ஜனா மது போதையில் தன் நண்பர் மொண்டலின் மனைவி பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார் .இதை கேட்டு கோபமான அந்த மொன்டெல் அந்த ஜனாவை அங்கிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் வேறு சில ஆயுதங்களை கொண்டு தாக்கினார் .இந்த தாக்குதலில் அந்த ஜனா ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில இறந்து போனார் .பின்னர் அந்த மொன்டெல் அவரின் இறந்த உடலை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி தலை மறைவானார் .
மறுநாள் அனாதையாக கிடந்த அந்த ஜனாவின் சடலத்தை பார்த்து அங்குள்ளோர் போலீசில் புகார் கொடுத்தனர் .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜனாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்  ,அப்போது அவரை அவரின் நண்பரே கொலை செய்ததை கண்டு பிடித்தனர் .பின்னர் அந்த மொன்டெல் குற்றத்தை ஒப்புக்கொண்டதும்  அவரை போலீசார் கைது செய்தனர்.