"ஒரு நைட்டு தங்கிட்டு பத்து பவுன் கேக்குறாளே" -கல்யாணத்துக்கு பெண் தேடியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

 
murder

பெண்ணை கொலை செய்து உடலை சாக்குமூட்டைக்குள் கட்டி வீசிச்சென்றவரை போலீசார் கைது செய்தனர். 

rape
ஈரோடு அருகே உள்ள ரங்கம்பாளையம் கே.கே.நகர், லட்சுமி கார்டன் குடியிருப்பு  பகுதியை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர்  49 வயதான யோகநாதன்.இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரியா என்ற  பெண்ணை திருமணம் செய்து வாழந்து வந்தார் .பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவர் இவரை விட்டு பிரிந்து சென்று  விட்டார் .அதன் பிறகு அந்த யோகநாதன் கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்தார் .அவறும்  இவரை விட்டு பிரிந்து சென்றார் .அதன் பிறகு இந்த யோகநாதன் தனியே  இருக்க முடியாததால் அங்குள்ள ஒரு திருமண தகவல்  மையத்தில் பதிவு செய்தார் . அவர்கள்  ஜெயலட்சுமி என்று பெண்ணின் போன் நம்பரை கொடுத்தனர் .
பின்னர் அவர் அடிக்கடி ஜெயலட்சுமியோடு பேசி விட்டு ஒரு நாள் நேரில் சந்திக்க வர சொன்னார் .அப்போது அந்த பெண்ணை அவருக்கு பிடிக்காததால் அவரை வீட்டை விட்டு போக சொன்னார் .ஆனால் அந்த பெண் இன்று ஒரு நாள் இரவு தங்கி விட்டு காலையில் போவதாக கூறி அவர் வீட்டில்  தங்கினார் .ஆனால் மறுநாள்  அந்த  பெண் அவரின் வீட்டை விட்டு போக வேண்டுமேன்றால் பத்து பவுன்  நகை தரவேணும் இல்லையன்றால் ஊரை  கூட்டி  தன்னை கெடுத்ததாக கூறுவேன் என்று மிரட்டினார் .இதனால் பயந்த  அவர் அந்த பெண்ணை கொலை செய்து அவரின் பிணத்தை ஒரு கோணியில் மூட்டைகட்டி  ஒரு இடத்தில் வீசி விட்டார் .பின்னர் போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றி விசாரித்து அந்த யோகநாதனை கைது செய்தனர் .