9 வயது சிறுமியிடம் அத்துமீறிய காம கொடூரன்! அடித்தே கொன்ற மக்கள்
ஹைதராபாத்தில் 9 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜியாகுடா பகுதியில் தேநீர் விற்பனை செய்துவருபவர் 55 வயதான அப்துல் அஜீஸ். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனைவியுடனான பிரச்சனை காரணமாக அவரிடமிருந்து பிரிந்து தனது தாயுடன் வசித்துவந்தார். இந்நிலையில், அஜீஸ் கடந்த புதன்கிழமையன்று, 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வீட்டருகே இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், குற்றம் உண்மை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
Abdul Aziz, 55, accused of sexually assaulting a 9-year-old girl in Hyderabad, was dragged out and lynched by a mob, later dying in hospital.
— Kailash Vashi (@KailashVashi) July 19, 2026
Both the assault on the child and the mob killing are crimes. If we start cheering lynchings, we’re saying we don’t trust courts, law or… pic.twitter.com/OAGyiugHGZ
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, ஒரு கும்பல் அஜிஸை தடிகளால் தாக்கி, உதைத்து, குத்தியதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அஜீஸுக்கு முதலுதவி அளித்த பின்னர் அவரை உஸ்மானியா பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இரவு சுமார் 10.30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். குல்சும்புரா காவல்துறை, பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் பிரிவு 105 மற்றும் 3(5)-ன் கீழ் பல நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. சிறுமி மீதான தாக்குதல் தொடர்பாக அஜீஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு தனி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு வழக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

