"டேய் என் மாமியாரை மறக்கலேன்னா .."மாமியாரின் கள்ள காதலால் காண்டான ஒரு மருமகன் செஞ்ச வேலை

 
love

 
மாமியாருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரை வெட்டிய மருமகன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.

murder

தமிழகத்தின் சென்னை புளியந்தோப்பு கே.எம் கார்டன் 13 வது தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மணிவண்ணன்  சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.  
இவர் சில மாதமாக  புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்  என்ற நபரின் மாமியார் ஈஸ்வரியுடன் பழகி வந்துள்ளார் .  பிறகு அந்த மணிவண்ணன் அடிக்கடி அவரின்  மாமியார் வீட்டிற்கு சென்று வந்ததால் இருவரும் இடையே இருந்த  கள்ளத்தொடர்பு வளர்ந்து  வந்தது . இதனை கேள்விப்பட்ட  பிரகாஷ்,பலமுறை அந்த மணிவண்ணனை  கண்டித்தும் அவர் தொடர்ந்து பிரகாஷின் மாமியாருடன் பழகி வந்த காரணத்தினால் பிரகாஷ் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்ய முடிவெடுத்தார் .
அதனால் சில நாட்களுக்கு முன்பு அந்த மணிவண்ணன் தனியாக ஆட்டோவில் செல்லும்போது அந்த பிரகாஷ் தனது நண்பர் ஒருவரை துணைக்கு அழைத்து கொண்டு ஒரு அரிவாளுடன் சென்றார் .பின்னர் அந்த  அருவாலால் அந்த மணிவண்ணனை உடலின் பல இடஙக்ளில் வெட்டி தள்ளினார் .இதனால் அந்த மணிவண்ணன்  உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை பெற்று  வருகிறார் .பிறகு போலீசார் வழக்கு பதிந்து  அந்த பிரகாஷ்  மற்றும் அவரின் நண்பரையும்  கைது செய்தனர்