மகளுடன் பழகிய நபரை கொடூரமாக கொன்ற தந்தை
சென்னையில் மகளுடன் பழகிய நபரை கத்தியால் தாக்கிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

சென்னை, திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பெரம்பூரைச் சேர்ந்த ரமேஷ், வ/33 என்பவருடன் பழகி வந்ததை அறிந்த காயத்ரியின் தந்தை பாபு என்பவர் ரமேஷை தன் மகளுடன் பழகுவதை நிறுத்துமாறு ஏற்கனவே கண்டித்துள்ளார். இந்நிலையில், பாபு நேற்று (10.11.2026) இரவு, பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை, சக்ரபாணி தோட்டத்தில் உள்ள ரமேஷின் வீட்டிற்கு சென்று தனது மகளுடன் பழகுவதை கண்டித்தபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பாபு தான் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியால் ரமேஷை குத்தியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இது குறித்து இறந்துபோன ரமேஷின் மனைவி ஷர்மிளா என்பவர் கொடுத்த புகார் மீது K-1 செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்து, எதிரி பாபு, வ/53, த/பெ.கண்ணன், திரு.வி.க. நகர், சென்னை என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

