"நாட்டு வைத்தியம் செய்யறேன்னு பெண்ணை வீட்டுக்குள் அடைத்து .."அடுத்து வைத்தியருக்கு என்னாச்சி பாருங்க.

 
arrest

 
நாட்டு வைத்தியம் செய்வது போல சிகிச்சைக்கு வந்த ஓர் பெண்ணை பலாத்காரம் செய்த வைத்தியருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது .

rape
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியை சேர்ந்த 37 வயதான  அபுதாஹீர் ஒரு நாட்டு வைத்தியர் ஆவார் .இவரிடம் அந்த பகுதியில் வசிக்கும் பல ஆண்களும் பெண்களும் உடலில் எந்த தொந்தரவு இருந்தாலும் சிகிச்சைக்கு வந்து லேகியம் முதல் பச்சிலை வரை வாங்கி செல்வது வழக்கம் .இவர் எந்த படிப்பும் படிக்காமல் அந்த பகுதி மக்களுக்கு சிகிச்சையளித்து வந்தார் .இவரின் சிகிச்சை சிலருக்கு பலனளித்தும் சிலருக்கு பலனளிக்காமலும்  இருந்தது 
இந்நிலையில் இவரை பற்றி கேள்விப்பட்டு ,இவரிடம் கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தின்   கோவையை சேர்ந்த ஒரு பெண் சிகிச்சைக்கு வந்தார் .அப்போது அந்த பெண்ணின் அழகில் மயங்கிய அந்த நாட்டு வைத்தியர் அவருக்கு சிகிச்சையளிப்பதுபோல் அவரின் வீட்டுக்குள் அடைத்து ,பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு அந்த பெண் அவரிடமிருந்து தப்பி வந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த அபுதாஹிர் மீது புகார் தந்தார் .அந்த பெண் அளித்த புகாரின்பேரில், அபுதாஹீர் கைது செய்யப்பட்டார்.பின்னர் கடந்த நாலு ஆண்டாக  இந்த வழக்கு  ஒற்றப்பாலம் நீதிமன்றத்தில் நடந்தது. சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது .அதில் அந்த குற்றவாளி நாட்டு வைத்தியருக்கு ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.