"என்னை ஏண்டா உன் பொண்டாட்டின்னு போட்டு வச்சிருக்கே "-அலறிய ஆராய்ச்சி மாணவி-ஒரு வாலிபர் செஞ்ச வேலையை பாருங்க

 
social media

தன்னை காதலிக்க மறுத்த ஆராய்ச்சி மாணவியை தன் மனைவி என்று சமூக ஊடகத்தில் பரப்பிய வாலிபரை போலீஸ் கைது செய்தது 

ஆராய்ச்சி மாணவிக்கு காதல் தொல்லை; தமிழக வாலிபர் கைது

கேரளாவை சேர்ந்த 27 வயது இளம்பெண் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இந்த இளம்பெண் கல்லூரி படித்த போது 30 வயதான  கணேஷ் குமார்  என்பவருடன்  நட்பாக பழகி வந்தார் . இந்த நிலையில் அந்த இளம்பெண் அந்த கணேஷ் குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன்  பேசுவதை நிறுத்தியுள்ளார் . இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை சந்தித்த கணேஷ்குமார் தன்னுடன் மீண்டும் பேசும்படி கேட்டு உள்ளார்.
  ஆனால் இதற்கு இளம்பெண் மறுத்து விட்டு அவரை இனி தன்னை பின் தொடர கூடாது என்று திட்டியுள்ளார் . இதனால் கணேஷ் குமார் அந்த பெண்னின் போட்டோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டு ,அவரை தன்னுடைய மனைவி என்றும் பதிவிட்டார் .அதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சியடைந்தார் ,மேலும் பலர் அந்த பெண்ணுக்கு போன்  செய்து இது பற்றி கேட்டதால் அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் மீது அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த கணேஷ் குமாரை கைது செய்து அவரை விசாரித்து வருகின்றனர் .