"டேய் என்னை கட்டிக்க போறவர் பாக்குறாரு என்னை விடு" -மண மேடையில் காதலிக்கு காதலனால் நேர்ந்த கதி

 
love

 ஒருவர் தனது காதலியை திருமண மண்டபத்தில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முபாரிக்பூர் கிராமத்தில் காஜல் என்ற பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் அவரை மறந்து விட்டு அவரின் வீட்டில் அவரின் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தார் .அதனால் அப்பெண்ணிற்கு திருமணம் நடைபெற இருந்தது. அப்போது அந்த காஜலை காதலித்த வாலிபர் கையில் துப்பாக்கியுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்த போது அந்த   இளைஞர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் காஜளிடம் சென்று தன்னை ஏமாற்றி விட்டு இப்படி அடுத்தவருடன் திருமணம் செய்து கொள்கிறாயே  என்று வாக்கு வாதம் செய்து விட்டு ,துப்பாக்கியால் அப்பெண்ணை சுட்டு வீழ்த்தினார்  இதனால் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து இறந்தார்

இந்த சம்பவம் நடந்த உடனேயே, காஜலின் தந்தை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாகபோலீசார் கூறினர்