"ஐயோ! கட்சிக்காரர் காருக்குள்ளே கட்டி பிடிக்கிறாரே.." -கதறிய மாணவிக்கு நேர்ந்த கதி

 
arrest

காரில் வைத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக ஒரு அரசியல் கட்சி பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

widow rape by neigbour

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு வருது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழகத்தின்  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பலபத்திரராமபுரத்தைச் சேர்ந்த அரசியல்  பிரமுகர் 35வயதான முத்துசாமி . இந்த நபர் அந்த ஊரில் பல தொழில்களை செய்து ஒரு தொழிலதிபர்க வலம் வந்தார் .மேலும் இவர் ஒரு கட்சியில் மிக முக்கிய பிரமுகர் ஆவார் .ஏற்கனவே கல்யாணம் ஆன இவருக்கு இரண்டு  குழந்தைகள் இருக்கிறது 
இந்நிலையில் அந்த நபர் சில நாட்களுக்கு முன்பு நன்றாக குடித்து விட்டு கட்சி கொடி கட்டிய காரில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக ஒரு 15 வயதான பள்ளி மாணவியொருவர் பள்ளியிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த நபர் தன்னுடைய காரை அந்த மாணவியின் அருகே நிறுத்தி வீட்டில் விடுகிறேன் என்று கூறி ஏற்றிக்கொண்டார் .பின்னர் அந்த நபர் அந்த பெண்ணிடம் காருக்குளே பாலியல் சீண்டல்களை செய்துள்ளார்  .மேலும் அந்த காரை ஒரு காட்டு பகுதிக்கு ஒட்டி சென்று அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்தார் .அப்போது அந்த பெண் தன்னை அவரிடமிருந்து காப்பாற்றுமாறு கத்தி கூச்சல் போட்டார் .அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை காப்பாற்றி  அவர் மீது போலீசில் புகார் தந்தனர் .போலீசார் அந்த நபரை கைது செய்தனர் .