"யோவ் ,எந்நேரமும் கள்ள காதலி மடியிலே மயங்கி கிடக்கிறே ..."கணவனின் கள்ளக்காதலை தட்டி கேட்டதால் நேர்ந்த கொடுமை

 
love

கணவரின் கள்ள காதலை கண்டித்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததை கண்டித்ததால் மனைவியை கொலை செய்த நபர்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் சோஹன்லால். இவருக்கு திருமணமாகி 33 வயதில் மனைவி உள்ளார்.இதற்கிடையில், சோஹன்லாலுக்கு அதேபகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.இதனால் அந்தக்கணவர், மனைவியை விட்டு விட்டு எந்நேரமும் கள்ள காதலியின் வீட்டிலேயே மயங்கி கிடந்தது ,அவரின் மனைவிக்கு மேலும் கோபத்தை உண்டு பண்ணியது .
இதனால் அந்தக் கணவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ள காதலியின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டார் அந்த மனைவி .அதனால் கோவப்பட்ட அந்த கணவர் அவரின் தம்பி மற்றும் தந்தையுடன் சேர்ந்து அந்த மனைவியை கொல்ல திட்டம் போட்டார் .அதனால் அந்த கணவர் அவர்களின் ஆலோசனையின் பேரில் மனைவியை அடித்து கொலை செய்தார் .இதனால் அந்த கணவர் சோஹன் லால் அங்கிருந்து தப்பி சென்றதும் ,போலீசாருக்கு தகவல் தெரிந்து அந்த நபர் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர் .அப்போது கொலை வழக்கில் அந்த சோஹன்லாலை கைது செய்தனர் .இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரின் தந்தை மற்றும் சகோதரனை பொலிஸ் தேடி  வருகிறது.