"பெண் அதிகாரியின் அறைக்குள் சென்று ..."விளையாட்டு போட்டி நடக்கும்போது ஒரு அதிகாரியின் பாலியல் விளையாட்டு ..

 
Abuse

ஒரு  விளையாட்டு போட்டியின் போது வந்திருந்த பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  ஆண் அதிகாரி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது 

rape
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கனகபுரா தாலுகா ஆரோஹள்ளியில் உள்ள  ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றிருந்தது. இந்த விளையாட்டு போட்டியின் போது ,ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கபடி குழுவில், தகவல் தொழில்நுட்ப பிரிவில் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அந்த அதிகாரியின் அழகில் மயங்கிய ராஜஸ்தான் மாநில கபடி குழுவின்  அதிகாரியான கியாபா சங்கர்  
அந்த பெண்ணிடம் அடிக்கடி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார் .மேலும் ஒரு நாள் இரவு அந்த பெண் அதிகாரி தங்கியிருந்த அறைக்குள் சென்று அவரிடம் பாலியல் உறவுக்கு கூப்பிட்டு தொல்லை கொடுத்தார் .இதனால் அந்த பெண் அதிகாரி அந்த  கியாபா சங்கர் மீது போலீசில் புகார் தந்தார் 
அதன்பேரில், கியாபா சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் அதிகாரிக்கு கியாப சங்கர் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி ராஜஸ்தான் கபடி விளையாட்டு சங்கத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.