Breakup பண்ண காதலி.. வீட்டை கொளுத்திய காதலன்!
காதல் உறவை முறித்துக்கொண்ட ஆத்திரத்தில், முன்னாள் காதலியின் வீட்டுக்குத் தீ வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம், டோம்பிவிலியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், சுமார் 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த காதல் உறவை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபேஷ் ரஸ்தோகி என்ற இளைஞர், அந்தப் பெண் பெற்றோருடன் வசிக்கும் வீட்டின் நுழைவுக் கதவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் உடனடியாகத் தீயை அணைத்ததால், இளம்பெண் மற்றும் அவரது பெற்றோர் காயமின்றி தப்பினர். இதையடுத்து, மண்பாடா போலீசார் இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்பாடா காவல் நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சந்தீபன் ஷிண்டே, தீபேஷ் ரஸ்தோகி கைது செய்யப்பட்டு நவம்பர் 24 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீட்டிற்குத் தீ வைத்து அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் கொல்லும் நோக்கம் தீபேஷ் ரஸ்தோகிக்கு இருந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

