தனிமையில் இருந்த காதல் ஜோடிகள்- மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ்

 
போலி

செங்கல்பட்டு அருகே போலீஸ் என கூறி காதலர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.


செங்கல்பட்டு அடுத்த பழவேலி இருளர் குடியிருப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் காதலர்கள் மற்றும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் மடக்கி போலீஸ் என கூறி மிரட்டி உள்ளார்.

இதனைக் கண்ட பழவேலி பகுதியை சேர்ந்த பிரகாசம்,40.தட்டிக்கேட்ட போது செங்கல்பட்டு ஆயுதப்படை போலீஸ் என கூறி உள்ளார். இது குறித்து,செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு பிரகாசம் தகவல் தெரிவித்தார்.விரைந்து சென்ற போலீசார் அங்கு பொதுமக்களிடம் தகராறு செய்த நபரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் காஞ்சிபுரம் மாவட்டம், ஒரக்காட்பேட்டை அடுத்த காவூர் கிராமத்தை சேர்ந்த இருசன் மகன் ரமேஷ்,37.என்பதும் தனியாக உள்ள காதலர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வசூல் செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.